அரசியல் தெரியாதெமக்கு ;
இறங்கும் துணிவும்இல்லை ;
அரசியல் சாக்கடை என்று வாய்கிழிய பேசுவோம் !
அத்தியாவசிய பொருட்களின் விலைதெரியாதெமக்கு
ஆபாச வெப்சைட்களின் அட்ரெஸ் மனப்பாடம் !
முத்துகுமாரனைப்பற்றி மூன்று நாளே நினைத்திருப்போம்
"எந்திரன்" வெளியீட்டுக்காய் இரண்டு வருடம் காத்திருப்போம்
நமீதாவின் உயரம் ,எடை இன்னபிற அளவுகள் தெரியும் !
இன்றைய இந்திய பணவீக்க விகிதம் தெரியாது
எங்களிடம் தரப்பட்ட எதிர்கால இந்தியாவை
நிகழ்கால சிதைவுகளுடன் அடுத்த தலைமுறைக்கு
ஒப்புக்கொடுபோம்
முகம் தெரியா எவனு (ளு) டனோ
மூன்று மணி நேரம் "மொக்கை "
"சாட்டிங் " என்ற பெயரில் ;
நேரத்தின் அருமையுணர்ந்த
இந்திய எதிர்காலம் நாங்கள் !?
Subscribe to:
Post Comments (Atom)
The emerging technologies in the construction industry 2022
The emerging technologies in the construction industry 2022 Construction technology has come a long way, but it’s still evolving. We are c...
-
பாராளுமன்றத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறவைத்தாக வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கலைஞர் சொல்லும் காரணங்கள் நமக்கு...
-
If you are a late-stage investor, then the exit and return risks become higher ... The risks are always on exits." PE firms typically ...
No comments:
Post a Comment