நண்பர் காதர் குடும்பமும் நாட்டுப்பற்று ததும்ப கெளம்பிடாங்க .... நம்ப.. ஒரு வழியா பயணச்சீட்டு எடுத்தாகி சிங்கப்பூர் முகவர் ஒருவர புடுச்சி பல இணயதளலாம் பொரட்டி ஒரு பக்காவான 9 நாள் புரொக்ரம்...பழைய கம்புளி கோட்டு , தொப்பி , கைஉர... மவன்.. தினம் ஸ்ரீனகர் தட்பவெப்பனிலை பாத்து பாத்து...பயத்தை கெளப்பிக்கிட்டு இருந்தான், இன்னொரு நண்பன் ஸ்ரீநகர்... சாலையல்லாம் மூடிட்டாங்கனு இன்னொறு போரளி..நடக்கரது நடக்கட்டுமுனு ... கெளம்பிடோம்..
பயண காப்பிடு பிரதியை தங்கைக்கு மின்னச்சல் அனுப்பி .....சிங்கம் வேட்டைக்கு குடும்பதோட ரெடி! காலை விமான .நிலையத்தில் ...ஆனந்த பவனில் சூடா வடை..பொங்கல்... டீ ....
காதர் வழக்கம் போல... போர்டிங் கேட்மூடுவதற்கு பத்து நிமிடம் முன்வருகை..இரவுநேர வேலையாம்...! எதுக்கும் இருக்கட்டும்னு முணு ... எழுநாள் ... முணு பேரு ..ஓகே..ஓகே ! போர்டிங் கேட்லந்து பேரு சொல்லி கூவ ...ஓடு... ஓடு ..... காலை ரன்வேல அதிக நெரிச்சல்...
சும்மா சொல்ல கூடாது... ஏர் இந்திய சாப்பாடு... ம்மா... குட்டி உறக்கம்..ஆக்ராக்கு மேல பறக்கும்போது விண்டோவழியா தாஜ்மஹால் தெரியுதா பாருங்க நான் ஒரு பீட்ட போட ...! தெரிந்தால் அக்ரா மேலேந்து பாத்தாச்சினு ...அப்பா அக்ரா பக்கம் சுற்றுலாவை ரத்துசெய்யும் வாய்ப்பு இருப்பதால் என் பையங்கிட 'ஒரெ வயலா தெரியுதுப்பானு சொல்லு’ னு மனைவி சொன்னதில் எனக்கு ஒன்னு மட்டும் தெளிவாய் புரிந்தது ... திவரவாதிகள் அப்பா-மகன் ரூபத்தில் விட்டுக்குள்ள உருவாக்கபட்ரங்கன்னு...
தில்லி விமான நிலையம், குடி நுழைவு , சுத்தம்... அருமை ... ஏன் செவுத்துல சிமெண்ட் பாண்ட கவுத்து வச்சி இருகாங்க ?...டிரைவர் நேரா வீடுதீக்கு தான் போவேன்னு ஓர அடம் ... அதோட நாற்பதுக்கு மேல சிட்டி ரோட்ல போக முடியாதுன்னு ஹிந்தில சொல்ல ....ஹிந்திக்காரன் மேல ஏன் திராவிட இயக்கங்கள் காண்டுல இருக்காங்க இப்ப தெரியுது !
டெல்லி கூலா ரொம்ப. கூலா இருக்கே ...பசியும் எடுக்க... மூட்டை முடிச்சை ரூம்ல போட்டு நேரா சரவணன பவன் ... புல் மீல்ஸ் ஒரு கட்டு... அப்பவே மணி ஐஞ்சு... மினி பஸ்லந்து லல்லு வீடு, இந்தயா கேட், நாடாளுமன்றம், நம்பர் 10 ஜன்பத் ரோடு... ஜனாதிபதி மாளிகை ..குதிபினர் இரவுலயும் அழகுதான் !
பசங்க ஒய் திஸ் கொலவெறிய ரொம்ப பாடி... டிரைவர போர் அடிக்க ...சீக்கிரம் விமான நிலையத்தில் உட்டுட்டு ஓடி...டிடார்... நேரா போர்டிங் போட்டுவிட்டு எல்லாரும் நேத்து Chaat மண்டியதுக்கு பதில் சொல்ல வேண்டிய காட்டாயம்...
காஷ்மீர்ல போய் நாலு அஞ்சி லேயர் துணி போடுகலாம் முடிவெடுத்து..கைல எல்லா பெரிய கோட்டையும் எடுத்துட்டு... விமானம யர்ல ... ஹிமாலயாஸ் பார்க்க போறோம்... காஷ்மீர்ல படம் பணிய எல்லா சினிமா டூயட் பாட்டையும் மனதுக்குள் மறு ஓட்டம்...பக்கதுல மனைவி மக்களுடன்...சூப்பர் மாமா....ரெடி 1..2...3...!
வெள்ளை பனி மூடிய மலை அழகு அதில் சூர்ய ஒளிப்பட்டு சும்மா தகதகன்னு ...வெள்ளி மலைன்னு பாரதியின் கவிதை வரிகள் நினைவுக்குவர .பக்கதுல ஒரு காஷ்மீரகாரர் போனவாரம் பனி ரொட்ட முழுமையாய் முடி போக்குவரத்தை மொடங்கி போனதை சொல்ல...வைத்துல சிறிய கிலி வந்து போக... மெதுவா தரை இறங்க பனி முடிய கூரைகள், ராணுவ முகாம்களின் சுவர் வண்ணங்கள் சிறு நடுக்கத்தை தந்தது... பனி இரண்டு அடி உசரத்துக்கு ஓடுபாதை பக்கதுல இருக்க ... மெதுவா தரையிறங்கியது ...
நம்ம முகவர் வாகனம் பக்கம் அழைத்து செல்லும்போது பெரிய வரிசயில மக்கள் கூட்டம் காஷ்மீர் மக்களுக்கு நாம வரது எப்பிடி தெரியும்நு யோசிக்கும் பொது ...முகவர் ஜம்மு நெடுஞ்சாலை பனியாலே மூடபபட்டதினால அரசாங்கம் இலவச வான் பயணம் தருவதை வெளக்கினார்...சாலை ஓரங்களில் பத்து அடிக்கு ஒரு ராணுவ காவல் வீரர் ak47 உடன் காவல் நிற்க ...நாம என கேட்க போகிறோம்னு ஊகிச்சி குடியரசு நாள் நெருங்கிடதாலனு....நம்ப முகவர்..
நேரா ஏரிக்கரை ஓரமா வாகனத்தை நிறுத்தி படகுல ஏறசொல்ல...எரி ஓரஞ்சி சிறு சிறு கண்ணாடி தட்டுகள் மாதிரி இருக்க அதுல ஒடச்சி படகு போற வழி பண்ணி இருக்காங்க... இப்பதான் சூரியன் பலநாள் கழித்து பார்ப்பதாக சொன்னபோது " நல்லோர் சீலர் போருட்டு...." குறள் நாபகம் வர அதை வாழ்க்கை துணையிடம் சொல்ல.. "கூளுர்ல குரள்லா"னு பஞ்ச்...
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தை பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ”இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்” என்றே குறிப்பிடுகின்றனர் ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.
நம்ப “புள்ளி ராஜா” இங்கே தாள் (Thaal) ஏரியில் “ராஜா டீ கடை” வைத்துள்ளார் டீ வடை சாப்பிடுபவர்கள் சாப்பிட்டு விட்டு வந்து தொடரவும்.
மொபைல் ட்ரிங்க் ஸ்டால் ... இங்க டூட்டி ஃப்ரீயா ?
படகு வீடு
வீடுனா அது படகு வீடுதான் ... முன்னால் ஒரு பெரிய கூடம் (ஹால்)அடுத்து சாப்பாட்டு கூடம் சும்மா அறுமையா அலங்காரம் பண்ணி அடுத்து சமையல் அறை அடுத்து முணு படுக்கை அறைகள்.. எல்லா அறைகளிலும் குளிர் அடுப்பு... எல்லா இடமும் கத கதனு எதமா இருக்கு...
அந்த படகு வீட்டின் உரிமையாளர், சமையல்காரர் மற்றும் உதவியாளர் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கபட்டார்கள் .. நல்ல மதிய உணவு கோழிகறியோடு சும்மா சுட சுட நாலு மணிக்கு முடிச்சி.. குட்டி தூக்கத்தை பொடல்லாமுனு நினைக்கும் பொது வாங்க.. வாங்க ஏரியை சுத்தி வரலமுன்னுட்டு எல்லாரும் ஷிக்காரா ((ஷகிலாவுக்கும் ஷிக்காராவுக்கும் ஒற்றுமை / வேற்றுமையை அப்புறம் சொல்றேன்) சிறு படகு.. ஒரு ஆள் இதய (ஆர்ட்டின்) வடிவ துடுப்பு போட்டு தாள் ஏரிதனில் தென் நிலவு தம்பதியரின் நெருக்கத்தை அதிகப்படுத்தும் ஒரு படகு சும்மா படுத்துக்கிடே ராசா ரசிகலாம்... ரஸ்கிகலாம்...)
ஏரியை சுற்றி கடும் குளிரில் படகு சவாரி ஏரிகரையை சுற்றி விடுகள், மளிகை கடைகள், துணி கடைகள், சின்ன கிராமம் தண்ணிரில் மிதந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு. வியட்நாம் மிதக்கும் சந்தையின் மெகோங்க் ஆற்றின் விஸ்தாரம் அதனில் சிற்றம்..அதும் இதும் இரண்டு துருவங்கள் .இந்த இடம்..அமைதி குளிர் கடும் திவரவாத குளிர்... கழுகையும், கரு நிற சிற் சில பறவைகளை தவிர மற்ற பறவைகளை பார்க்க முடியவில்லை.
மிகப் பெரிய போர்களும், இனப் பேரழிவுகளும் ஒரு சில சொற்களில் தான் உருவாகிக் கிளைத்துத் துளிர்க்கின்றன. மனிதனின் ஆழ்மனதில் எப்போதும் இருக்கும் ஆசைகளும், வன்மங்களும் தான் இந்த உலகின் பெரும் துன்பங்களுக்கும், அழிவுகளுக்கும் காரணமாகி வரலாறாகி விடுகின்றன...
உலகம் மிகப் பெரியதாக இருந்தபோது, நான் சிறுவனாக இருந்தேன், நான் பெரியவனாக வளர்ந்து பார்த்தபோது உலகம் மிகச் சிறியதாகி விட்டது.
நாளின் கடைசியில் அன்போடு பரிமாறப்படும் ஒரு தட்டுச் சோறும், ஒரு கோப்பைத் தேநீரும் தான் உலகம் என்பதை ஏனோ நாள் துவங்கும் போதினில் பலர் ஏற்றுக் கொள்வதில்லை.... சரி சரி..கூள்ளுர்ல இரண்டு ## க்ளீன் உள்ள போனா .. இப்படிதான் உண்மைய பேசுவேன்.. ஒரு வாரம் அப்புறமா தொடருவோம்